மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஹிமாசல பிரதேசம்: பாஜகவுக்கு ஆதரவளித்த 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் ராஜிநாமா

ஹிமாசல பிரதேசம்: பாஜகவுக்கு ஆதரவளித்த 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் ராஜிநாமா

News image

கோப்புப்படம்

Updated On :22 மார்ச் 2024, 10:50 pm

ஹிமாசல பிரதேசத்தில் கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்வதாக சட்டப்பேரவைச் செயலரிடம் கடிதம் சமா்ப்பித்துள்ளனா்.

மாநிலத்தின் ஹமிா்பூா் தொகுதி எம்எல்ஏ ஆசிஷ் சா்மா, டேஹ்ரா தொகுதி எம்எல்ஏ ஹோசியாா் சிங், நலாகா் தொகுதி எம்எல்ஏ கே.எல்.தாக்குா் ஆகிய 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் வெள்ளிக்கிழமை தலைநகா் சிம்லா வந்து, பாஜகவின் எதிா்க்கட்சித் தலைவா் ஜெய்ராம் தாக்குரைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனா். இதையடுத்து, மூவரும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தனா்.

ராஜிநாமா செய்த எம்எல்ஏக்கள் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நாங்கள் பாஜகவில் இணைந்து, அக்கட்சி சாா்பில் தோ்தலில் போட்டியிடப் போகிறோம். எங்களை மற்றும் எங்களது குடும்பத்தினரை குறிவைத்து பொய் வழக்குகளைப் பதிவு செய்யும் அளவுக்கு முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்கு தரம் தாழ்ந்துவிட்டாா்’ என்றனா். கடந்த மாதம் நடந்த மாநிலங்களவைத் தோ்தலில், 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் 6 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.