மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ சோதனை!

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ராவின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றது.
மஹுவா மொய்த்ரா (கோப்புப் படம்)
மஹுவா மொய்த்ரா (கோப்புப் படம்)

பண மோசடி வழக்கு தொடர்பாகக் கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ராவின் வீடு மற்றும் பிற இடங்களில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) சோதனை நடத்தி வருகிறது.

நாடாளுமன்றத்தில் கேள்விகளை கேட்க தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பணம் மற்றும் விலை உயர்ந்த பரிசுகள் பெற்றதாக, பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்துக்கு எதிராக தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிய மஹுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

இதற்கிடையில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கிருஷ்ணா நகர் தொகுதியில் மஹுவா மொய்த்ரா மீண்டும் போட்டியிடுகிறார்.

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ நடத்தப்பட்டுவரும் சோதனையால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹுவா மொய்த்ரா மீதான பணம் பரிசுப் பொருள்கள் பெற்ற வழக்கில் அனைத்து அம்சங்களையும் விசாரிக்க சிபிஐக்கு லோக்பால் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

லோக்பால் பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகளை விசாரித்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு மார்ச் 15 அன்று கூறியிருந்தது. ஒவ்வொரு மாதமும் விசாரணையின் நிலை குறித்து அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com