விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு - மாணவர் மீது கொடூர தாக்குதல்
மாதிரி படம்
மாதிரி படம்

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் சக மாணவரை கத்தியால் குத்தியதாக காவலர்கள் தெரிவித்தனர்.

பிவண்டி பகுதியைச் சேர்ந்த அவர்கள் செவ்வாய்க்கிழமை 10-ம் வகுப்பு தேர்வு எழுதும்போது தங்களுக்கு தேர்வுத் தாளை காண்பிக்கவில்லை என்பதால் சக மாணவரைக் கத்தியால் தாக்கியுள்ளனர்.

இது குறித்து, “பள்ளி இறுதி வகுப்புத் தேர்வின்போது தாக்கப்பட்ட மாணவன் விடைத்தாளை காண்பிக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மற்ற 3 மாணவர்கள், அந்த மாணவர் தேர்வறையை விட்டு வெளியே வரும்போது அவரை பிடித்துவைத்து தாக்கியுள்ளனர். மேலும், கத்தியால் குத்தினர், காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” எனக் காவலர்கள் தெரிவித்தனர்.

காயம்பட்ட மாணவர் மருத்துவமனையில் இருந்து திரும்பியுள்ளார். தாக்கிய 3 பேரின் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 324-ன் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக சாந்தி நகர் காவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com