கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

அத்வானிக்கு ’பாரத ரத்னா’: குடியரசுத் தலைவர் நேரில் சென்று வழங்கினார்

Published On :

நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா, பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி உள்பட 5 பேருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பாரத ரத்னா விருதுகளை வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று(மார்ச். 30) நடைபெற்றது.

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதுகளை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் கடந்தாண்டு காலமான நிலையில், அவரது மகள் நித்யா ராவ் விருதுதினை பெற்றுக்கொண்டார்.

மறைந்த பிகார் மாநில முன்னாள் முதல்வரும் சோஷலிச தலைவருமன கர்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அவரது மகன் ராம் நாத் தாக்குர் விருதை பெற்றுக்கொண்டார்.

வயது மூப்பின் காரணமாக நேரில் வர இயலாத பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு அவரது இல்லத்தில், இன்று (மார்ச். 31) ’பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அத்வானி இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு விருதை வழங்கி கௌரவித்தார்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.