மோடியின் உத்தரவாதம் சீனப் பொருட்களை போன்றது: தேஜஸ்வி யாதவ்

மோடியின் உத்தரவாதம் சீனப் பொருட்களை போன்றது: தேஜஸ்வி யாதவ்

மோடியின் உத்தரவாதம் சீனப் பொருட்களை போன்றது என்று பிகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, தலைநகர் தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் 'இந்தியா’ கூட்டணிக் கட்சியினர் சார்பில் மாபெரும் போராட்டம் இன்று(மார்ச். 31) நடைபெறுகிறது. அதில் பங்கேற்று பேசிய பிகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறது. ஆர்.எஸ்.எஸ் கொள்கையை செயல்படுத்த எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது.

என் மீதும், என் அப்பா, அம்மா, சகோதரிகள் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஹேமந்த் சோரன் மற்றும் கேஜரிவால் கைது செய்யப்பட்ட விதம் அனைவரும் பார்த்ததுதான். இருந்தாலும் அவர்களின் அச்சுறுத்தலுக்கு நாங்கள் பயந்துவிடப் போவதில்லை. சிங்கம் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளது. நாங்கள் சிங்கங்கள், நாங்களும் போராட்டத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.

மோடி தனது உத்தரவாதத்தை வலுவானது என்று கூறுகிறார். ஆனால் அவருடைய உத்தரவாதம் சீனப் பொருட்கள் போன்றது என்று நாங்கள் கூறுகிறோம், அதை இரண்டு-மூன்று முறை பயன்படுத்தினால் அது மோசமாகிவிடும். எனவே அவரது உத்தரவாதங்கள் தேர்தலுக்காக மட்டுமே. பிரசாரம் மற்றும் அச்சுறுத்தல்களில் மட்டுமே பாஜக ஈடுபடுகிறது. '400 இடங்கள் இலக்கு' என்ற முழக்கத்தைக் கொடுப்பவர்கள் எதையும் பேசலாம்.

ஆனால் மக்கள்தான் உண்மையான எஜமானர்கள், யார் நாட்டை ஆள வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com