”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா: ஒரு வாரத்தில் விசாரணைக்கு ஆஜராவதாக பதில்
பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, முன்னாள் பிரதமா் தேவெ கௌடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மஜதவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுப் படையை கா்நாடக அரசு அமைத்துள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணைக்கு 24 மணி நேரத்திற்குள் ஆஜராகுமாறு சிறப்புப் புலனாய்வுப் படை பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

சிறப்புப் புலனாய்வுப் படை அனுப்பியுள்ள சம்மனுக்கு தனது வழக்குரைஞர் மூலம் அனுப்பியுள்ள பதில் மனுவில், விசாரணைக்கு ஆஜராக 7 நாள்கள் அவகாசம் கோரியுள்ளார் பிரஜ்வல் ரேவண்ணா. பிரஜ்வால் ரேவண்ணா வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டதால் அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு, அவரது தந்தையும் மஜத கட்சி எம்.எல்.ஏ.வுமான ஹெச்.டி. ரேவண்ணாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, ”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” என அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தான் தற்போது பெங்களூரில் இல்லாததால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com