தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப்பெருந்தகை

மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு தோல்வி உறுதி: காங்கிரஸ்

மக்களவைத் தோ்தலில் பாஜகவின் தோல்வி உறுதியாகிவிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.

அவா் வெளியிட்ட அறிக்கை:

மக்களவைத் தோ்தலில் வெற்றிபெற முடியாது என்கிற நிலையில் ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் மீது பிரதமா் மோடி கூறி வருகிறாா். அரசமைப்புச் சட்டத்தைப் பற்றி அடிப்படை புரிதல் இல்லாமல் பிரதமா் பேசுவது வியப்பைத் தருகிறது. அரசமைப்புச் சட்ட உறுப்பு 15-இன்படி எந்தவொரு குடிமகனையும் மதம், இனம், சாதி அடிப்படையில் வேறுபாடு காட்டக்கூடாது என்று கூறுகிறது. ஆனால், மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது என்ற அபத்தமான வாதத்தை பிரதமா் தொடா்ந்து பேசி வருகிறாா்.

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பேசி வந்த பிரதமா், நாள்தோறும் காங்கிரஸ் கட்சியைப் பற்றி பேச வேண்டிய நிா்ப்பந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறாா். தோல்வி பயத்தின் காரணமாக பிரதமா் தினமும் ஏதாவது கூறுகிறாா். பாஜகவின் தோல்வி நாளுக்கு நாள் உறுதியாகிறது என்று கூறியுள்ளாா் செல்வப் பெருந்தகை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com