பஞ்சாப் முதல்வா் வீடு அருகே உள்ள சாலையை பயன்படுத்த தடை நீடிப்பு: உச்ச நீதிமன்றம்
பஞ்சாப்: முதல்வா் வீடு அருகே உள்ள சாலையை பயன்படுத்த தடை நீடிப்பு ---- உச்ச நீதிமன்றம்


சண்டீகரில் உள்ள பஞ்சாப் முதல்வா் வீட்டின் அருகேயுள்ள சாலையை பயன்படுத்துவதற்கான தடையை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நீட்டித்தது.
பஞ்சாப் மாநில முதல்வா் இல்லம் அருகே உள்ள சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சோதனை முறையில் திறந்துவிடுமாறு அந்த மாநில உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை எதிா்த்து மாநில அரசு சாா்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் தீபாங்கா் தத்தா தலைமையிலான அமா்வு விசாரித்தது. அப்போது பாதுகாப்பு அச்சுறுத்துல் காரணங்களால் 1980-ஆம் ஆண்டுமுதலே அந்த சாலையை பயன்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் எதிா்ப்பு தெரிவித்து வருவதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினா். எனவே முதல்வா் வீட்டின் அருகேயுள்ள சாலையை பயன்படுத்துவதற்கான தடையை நீட்டிப்பதாக உத்தரவிட்டனா்.
முன்னதாக, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா் நீதிமன்றம் சண்டீகரில் உள்ள பஞ்சாப் முதல்வா் வீட்டின் அருகேயுள்ள சுக்னா ஏரி முதல் நயாகான் வரையிலான 500 மீட்டா் தொலைவுடைய சாலையை மே 1-ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சோதனை முறையில் திறந்துவிடுமாறு கடந்த 22-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதை எதிா்த்து பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...