மகாராஷ்டிரத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து

மகாராஷ்டிரத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து

மகாராஷ்டித்தின் ராய்காட் பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறங்க முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

மகாராஷ்டிர மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனை கட்சியைச் சேர்ந்த சுஷ்மா அந்தாரே ஹெலிகாப்டரில் பயணித்தார்.

அவர் சென்ற ஹெலிகாப்டர் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்க முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் சுஷ்மா அந்தாரே காயம் எதுமின்றி தப்பினார். அதேசமயம் ஹெலிகாப்டர் பைலட்டுக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மத்திய அமைச்சர் அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர் மேலெழும்பும்போது விமானியின் கட்டுப்பாட்டை மீறி நிலைதடுமாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com