இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

பிரிஜ்வல் ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

News image
Updated On :4 மே 2024, 10:28 am

DIN

கர்நாடக மாநிலம் ஹாசன் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை விடியோ எடுத்து வைத்து மிரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டில் சிக்கி தலைமறைவாகியிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா வீட்டுக்கு பாதிக்கப்பட்ட பெண்களை வரவழைத்து, அவர்களிடம் விசாரணை நடத்தி சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் பதிவு செய்து வருகிறார்கள்.

ரேவண்ணாவின் வீட்டிலிருந்து கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவற்றை புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் பிரதமா் தேவெ கௌடாவின் பேரனும் ஹாசன் தொகுதி மதச்சாா்பற்ற ஜனதா தள (மஜத) எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது தொடர்ந்து பல பெண்களும், பெண்களின் சார்பாக அவர்களது மகன் உள்ளிட்டோரும் புகார் அளித்து வருகிறார்கள். அது தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் பதிவு செய்து வருகிறார்கள்.

கா்நாடகம், ஹாசன் தொகுதி எம்.பி.யாகவுள்ள பிரஜ்வல் ரேவண்ணா 500-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அதை 2,800-க்கும் மேற்பட்ட காணொலியாக பதிவு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரில், ஹொளே நரசிப்புரா காவல் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்விவகாரம் தொடா்பாக சிறப்பு விசாரணைப் பிரிவு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது.

தேவெ கௌடா குடும்பத்தாருக்கு இந்த விவகாரம் நெருக்கடியை ஏற்படுத்தியதையடுத்து, மஜக கட்சியிலிருந்து தந்தையும் மகனும் இடைநீக்கம் செய்யப்பட்டனா். விசாரணைக்கு ஆஜராகுமாறு இருவருக்கும் எஸ்.ஐ.டி. சம்மன் அனுப்பியது.

ஆனால், ஜொ்மனியில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணா, விசாரணைக்கு ஆஜராக 7 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று தனது வழக்குரைஞா் மூலம் எஸ்.ஐ.டி.யிடம் கேட்டுக்கொண்டாா்.

இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகாத பிரஜ்வல் ரேவண்ணா மீது ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சா் ஜி.பரமேஷ்வரா தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.