கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

கர்நாடகத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், மொத்தம் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என முதல்வர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளுக்கு 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏழு கட்ட மக்களவைத் தேர்தலில் மாநிலத்தின் 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எனவே, 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று(மே 5) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வடைகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலர், கர்நாடகத்தில் இறுதிகட்ட பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பெலகாவியில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், காங்கிரஸ் பொதுச் செயலர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களை இன்று சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, கடந்த எட்டு மாதங்களில், நாங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம். நாங்கள் மே 20 ஆம் தேதி ஆட்சிக்கு வந்தோம். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் பிரசாரத்தின் போது எங்களுக்கு பல கோரிக்கைகள் வந்தன. அதில், ஒன்று உறுதியளித்தபடி அரிசியின் அளவை 10 கிலோவாக உயர்த்தி வழங்கியுள்ளேோம்.

இன்று மாலை பிரசாரம் முடிவடையும் நிலையில், மே 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ஏப்ரல் 26-ம் தேதி கடைசி கட்ட தேர்தலில் 8-9 இடங்களில் வெற்றி பெறுவோம். இந்த இரண்டாம் கட்டத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். நாங்கள் அறிவித்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதால், 20 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். நாங்கள் காங்கிரஸ் உத்தரவாதத்தை தொடர்ந்து நிலைநிறுத்துகிறோம். ஆனால் எப்படியும் காங்கிரஸ் உத்தரவாதத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாஜக தலைவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com