‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

காங்கிரஸின் ஆட்சிக் கனவு தகர்க்கப்படும் என அனுராக் தாக்குர் கருத்து
அனுராக் தாக்குர்
அனுராக் தாக்குர்ANI

‘காங்கிரஸ் தலைவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்வதாகவும் பொய்யான வாக்குறுதிகள் மூலம் ஆட்சி அமைக்கும் அவர்களின் கனவு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளில் தகர்க்கப்படும் எனவும் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் அனுராக் தாக்குர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூர் தொகுதியில் போட்டியிடும் அனுராக் தாக்குர் பிராசாரத்தில் பேசியதாவது:

முதலில் அமேதியில் இருந்து ராகுல் காந்தி வயநாட்டுக்கு ஓடினார். தற்போது ரே பரேலியில் போட்டியிடுகிறார். ரே பரேலியிலும் காங்கிரஸ் துடைத்தெறியப்படும்.

காங்கிரஸ் தனது 60 ஆண்டுக்கால ஆட்சியில் இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வெளிநாட்டு சக்திகளுக்கு தாரை வார்த்தது. ஸ்ரீலங்காவுக்கு கட்சத்தீவை கொடுத்தது. அதே நேரத்தில் பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ராணுவத்தைப் பலப்படுத்தியுள்ளார்.

காங்கிரஸின் தேர்தலறிக்கையில் வெளிநாட்டு சக்திகளின் கை இருப்பதை தெளிவாக பார்க்க முடிகிறது.

பாஜக ஆட்சிக்கு வந்தால் ரிசர்வேஷன் மற்றும் அடிப்படை சட்டத்தை பாஜக மாற்றிவிடும் என காங்கிரஸ் பொய் பிராசாரம் மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த முறை 92 ஆயிரம் வாக்குகளில் அனுராக் தாக்குர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த முறையும் வெற்றி பெறுவேன் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com