பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பகுஜன் திராவிட கட்சியின் நிறுவனத் தலைவரான தமிழ் வம்சாவளி சீக்கியர் ஜீவன் சிங் மல்லா.
தூத்துக்குடியில் பகுஜன் திராவிட கட்சியின் வேட்பாளர்களுடன் ஜீவன் சிங் மல்லா.(கோப்புப்படம்)
தூத்துக்குடியில் பகுஜன் திராவிட கட்சியின் வேட்பாளர்களுடன் ஜீவன் சிங் மல்லா.(கோப்புப்படம்)

பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூர் மக்களவைத் தொகுதியில் பகுஜன் திராவிட கட்சி வேட்பாளராக தமிழ் வம்சாவளி சீக்கியரான ஜீவன் சிங் மல்லா அறிவிக்கப்பட்டுள்ளார்.

தனித் தொகுதியான ஹோஷியார்பூரில் போட்டியிடும் ஜீவன், சீக்கிய ஆர்வலர்கள் மற்றும் தலித் ஆர்வலர்களுடனான கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு கோரி வருகிறார்.

ஹோஷியார்பூர் தொகுதியை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் குறித்து பேசிய ஜீவன், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கான்ஷி ராம் முதல்முறையாக இந்த தொகுதியில் போட்டியிட்டுதான் 1996-ல் மக்களவைக்கு தேர்வானார், அதனால் இங்கு போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் பகுஜன் திராவிட கட்சியின் வேட்பாளர்களுடன் ஜீவன் சிங் மல்லா.(கோப்புப்படம்)
வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

மேலும், அவர் கூறியதாவது:

“பகுஜன் திராவிட கட்சியின் தலைவர்களாக பெரியாரையும், கான்ஷி ராமையும் பின்பற்றுவதாக தெரிவித்த ஜீவன், தேர்தல் வெற்றியை கடந்து குருநானக்கின் கொள்கையை பரப்ப நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.

எங்கள் மக்களில் 60 சதவிகிதம் பேர் விவசாய நிலமில்லாத கூலித் தொழிலாளிகளாகதான் இருக்கிறார்கள். சீக்கிய மதத்துக்கு மாறிய பிறகு சாதியில் இருந்து விடுபட்டதாக உணர்கிறேன். ஆனால், அரசியலமைப்புபடி அது நடக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

தலித் சமூகத்தை சேர்ந்த ஜீவன் குமார் மல்லா, கடந்த ஜனவரி 2023-இல் சீக்கிய மதத்துக்கு மாறினார். அதன்பிறகு ஜீவன் சிங் மல்லா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார்.

தில்லி விவசாய போராட்டத்திற்கு பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு பகுஜன் திராவிட கட்சியை தொடங்கினார்.

முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் இந்த கட்சி சார்பில், தமிழகத்தின் திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com