தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்
2024 மக்களவைத் தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும் என்றார் அசாம் முதல்வர்.


2024 மக்களவைத் தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார்.
அசாம் மாநிலம் வடக்கு குவாஹாட்டியிலுள்ள அமின்கான் பகுதியில் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தனது குடும்பத்துடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மாநிலத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. எந்த வாக்குச்சாவடியிலும் வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி வாய்ப்பைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக மக்கள் வாக்களித்து வருகின்றனர். மாநிலத்தில் வளர்ச்சியைக் கொண்டுவருபவர்களுக்கு வாக்களித்து வருகின்றனர்.
இந்த மக்களவைத் தேர்தலில் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வரலாற்று சிறப்புமிக்க பங்காற்றும். பிரதமர் நரேந்திர மோடி பெருவாரியான வாக்குகளைப் பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பார்'' எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...