இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவின் காலஹன்டியில் பாஜக வேட்பாளர் விஜய் சங்கல்ப்பை ஆதரித்த ராஜ்நாத் சிங் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் ஜவஹர்லால் நேரு தொடங்கி இந்திரா காந்தி மற்றும் மன்மோகன் சிங் வரை அனைவரும் வறுமையை ஒழிப்போம் என்று வாக்குறுதி அளித்தாலும் அவை அனைத்தும் தோல்வியடைந்துவிட்டது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வறுமையை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மோடியின் ஒன்பது ஆண்டுக்கால ஆட்சியில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள ராஜ்நாத் சிங், இது பாஜக கூறியதல்ல, நிதி ஆயோக் அறிக்கை என்று அவர் கூறினார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் மோடி செய்தது போல் முந்தைய எந்த அரசும் செய்ததில்லை. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் வீடு, குடிநீர் மற்றும் எரிவாயு இணைப்பு இல்லாத குடும்பம் இருக்காது.
மக்களவை மற்றும் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



