ஹிந்துக்களின் மக்கள்தொகை சரிவுக்கு காங்கிரஸ் தான் காரணம்: பாஜக குற்றச்சாட்டு

முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகரித்துள்ளதாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஹிந்துக்களுக்கு என ஒரு நாடு இருக்காது என பாரதிய ஜனதா கட்சி குறிப்பிட்டுள்ளது.
அமித் மால்வியா
அமித் மால்வியா(கோப்பு படம்)

நாட்டில் 1950-2015 காலகட்டத்தில் ஹிந்துக்களின் மக்கள் தொகை குறைந்துள்ளதாகவும், முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாகவும் பாரதிய ஜனதா கட்சி தேசிய தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அமித் மாளவியா வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளர்.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்தியாவில் 1951-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஹிந்துக்களின் மக்கள்தொகை 84.68 சதவிகிதம். இது 2015-ல் 78.06 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ஆனால், முஸ்லிம்களின் மக்கள்தொகை 43 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதைத்தான் காங்கிரஸ் ஆட்சி நமக்கு செய்தது. அவர்களை ஆளவிட்டால், ஹிந்துக்களுக்கு என ஒரு நாடு இருக்காது' எனக் கூறியுள்ளார்.

மேலும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு ஆய்வறிக்கையில்,1950 முதல் 2015 வரை, ஹிந்துக்களின் மக்கள்தொகை 7.8 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், முஸ்லிம்களின் மக்கள் தொகை 43 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com