அஜித், ஷிண்டேவுடன் இணைந்து விடுங்கள்! பவார், உத்தவுக்கு மோடி அறிவுரை

காங்கிரஸுடன் சேர்ந்து விடுவதற்குப் பதிலாக அஜித், ஷிண்டேவுடன் இணைந்து விடுங்கள் என்று சரத்பவார், உத்தவ் தாக்கரேவுக்கு மோடி அறிவுரை கூறியுள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடிபிடிஐ

வடக்கு மகாராஷ்டிரத்தின் நந்தூர்பார் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மோடி, ஹிந்து தர்மத்தை ஒழிக்க காங்கிரஸ் சதி செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அங்கு பேசிய மோடி, “ஜூன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேசியவாத காங்கிரஸ், சிவசேனை ஆகிய இரு 'நகல்' கட்சிகளும் காங்கிரஸுடன் இணைய முடிவெடுத்துவிட்டதாகவும், அவர்களுடன் இணைந்து அழிந்துபோவதற்குப் பதிலாக அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டேவுடனாவது இணையலாம்“ என்றார்.

சரத்பவார் பெயரைக் குறிப்பிடாமல், 40-50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் ஒரு தலைவர் பாராமதி மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவுக்குப் பின் கவலையடைந்துள்ளார் என தெரிவித்த மோடி சரத்பவார் கூறியதை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

"அடுத்த சில ஆண்டுகளில், பல மாநிலக் கட்சிகள் காங்கிரஸுடன் மேலும் நெருக்கமாக இருக்கும் அல்லது தங்கள் கட்சிகளுக்கு நல்லது என்று கருதினால் காங்கிரஸுடன் இணைவது பற்றியும் முடிவெடுக்கும்" என்றும் பேட்டி ஒன்றில் சரத் பவார் கூறியிருந்தார்.

காங்கிரஸுடன் இணைந்து அழிந்து போவதற்கு பதிலாக அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்து கொள்ளலாம் என மோடி அறிவுறுத்தி பேசியதுடன் ஹிந்து தர்மத்தை ஒழிக்க காங்கிரஸ் கட்சியினர் சதி செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

ராமர் கோயில் மற்றும் ராமநவமி விழாக்கள் இந்தியாவின் கொள்கைக்கு எதிரானது என்று காங்கிரஸ் கூறியது எனவும் மோடி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com