

விமான விபத்தில் பலியான மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் சென்ற தனி விமானம் புணே மாவட்டத்தின் பாராமதியில் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் அஜீத் பவார் உள்பட விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகினர்.
இந்த நிலையில், அஜீத் பவாருடன் இருக்கும் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
அஜீத் பவார் மக்களுடன் வலுவான பிணைப்பையும், அடித்தட்டு மக்களுடன் ஆழமான தொடர்பையும் கொண்டிருந்த மக்கள் தலைவர்.
மகாராஷ்டிர மக்களுக்குச் சேவையாற்ற எப்போதும் முன்களத்தில் இருந்த ஒரு கடின உழைப்பாளி என்ற வகையில் அவர் பரவலாக மதிக்கப்பட்டார்.
நிர்வாக ரீதியில் அவரது ஆழ்ந்த அறிவும், ஏழை மற்றும் பின்தங்கிய மக்களின் மேம்பாட்டிற்கான அவரது ஆர்வமும் குறிப்பிடத்தக்கது.
அவரது அகால மரணம் மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.