குறைவான தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்: என்ன காரணம்?

காங்கிரஸின் தொகுதி தேர்வில் புதிய மாற்றம்
கோப்புப் படம்
கோப்புப் படம்

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாக 328 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 400 தொகுதிகளுக்கு குறைவாக காங்கிரஸ் போட்டியிடுவது இதுவே முதல்முறை.

கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு காரணமாகவே காங்கிரஸ் களம் காணும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி கடந்த நான்கு ஆண்டுகளாக போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை பின்வருமாறு:

  • 2019- 421

  • 2014- 464

  • 2009- 440

  • 2004- 417

அவற்றில் காங்கிரஸ் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை:

  • 2019- 52

  • 2014- 44

  • 2009- 206

  • 2004- 145

கூட்டணி கட்சிகளின் காலமான 1989 மற்றும் 1999-களில் கூட காங்கிரஸ் 450-க்கும் அதிகமான தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்கியது.

இந்த முறை உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிஹார் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் களமிறங்குகிறது. இவற்றில் இருந்து மட்டுமே 201 உறுப்பினர்கள் மக்களவைக்குச் செல்கின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் 2019 தேர்தலில் 80 தொகுதிகளில் 67-ல் போட்டியிட்டது. ரே பரேலியில் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. இந்த முறை சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி உடன் இணைந்து அந்த மாநிலத்தில் நிற்கிறது.

மே 7 மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு முடிவுற்றது. ஒட்டுமொத்த மக்களவை தொகுதிகளில் பாதிக்கும் மேலானவற்றுக்கு ஏற்கெனவே வாக்குப் பதிவு முடிவு பெற்றுள்ளது.

அடுத்த நான்கு கட்டங்கள் வாக்குப் பதிவு முடிந்த பின்னர் ஜுன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com