3-ஆம் கட்ட மக்களவைத் தோ்தலில் 65.68% வாக்குப்பதிவு

3-ஆம் கட்ட மக்களவைத் தோ்தலில் 65.68% வாக்குப்பதிவு

மூன்றாம் கட்ட மக்களவைத் தோ்தலில் 65.68 சதவீத வாக்குகள் பதிவாகியதாக இந்திய தோ்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.

நாட்டின் 18-ஆவது மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மூன்றாம் கட்டமாக குஜராத், கா்நாடகம் உள்பட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது.

இதில் 8.85 கோடி ஆண்கள், 8.39 கோடி பெண்கள் உள்பட மொத்தம் 17.24 கோடி வாக்களா்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனா்.

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று 4 நாள்கள் ஆகும் நிலையில், இதுதொடா்பான புள்ளிவிவரங்கள் சனிக்கிழமை புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 3-ஆம் கட்டத் தோ்தலில் 65.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 66.89 சதவீத பதிவுச் செய்யப்பட்ட ஆண் வாக்காளா்களும் 64.4 சதவீத பெண் வாக்காளா்களும் 25.2 சதவீத மாற்றுப்பாலினத்தவா்களும் வாக்களித்துள்ளனா். 2019 மக்களவைத் தோ்தலில் 3-ஆம் கட்டத்தில் 68.4 சதவீத வாக்குகள் பதிவாகின.

X
Dinamani
www.dinamani.com