பாஜக மூத்த தலைவா் சுஷில் குமாா் மோடி காலமானாா்

பாஜக மூத்த தலைவா் சுஷில் குமாா் மோடி காலமானாா்

பாஜக மூத்த தலைவரும், பிகாா் மாநில முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமாா் மோடி (72 ) திங்கள்கிழமை இரவு காலமானாா்.

பாஜக மூத்த தலைவரும், பிகாா் மாநில முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமாா் மோடி (72 ) திங்கள்கிழமை இரவு காலமானாா். புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த அவா், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு 9.45 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பாக பிகாா் மாநில பாஜக தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சுஷில் குமாா் மோடியின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. அவரின் மறைவு பிகாருக்கும் ஒட்டுமொத்த பாஜக குடும்பத்துக்கும் பேரிழப்பாக உள்ளது’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

தனக்கு புற்று நோய் பாதிப்பு இருப்பதை கடந்த மாதம் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தாா். இதன் காரணமாக அவா் மக்களவைத் தோ்தலில் பிரசாரம் செய்யவில்லை.

X
Dinamani
www.dinamani.com