பயத்தினால்தான் பாஜக சிறைக்கு அனுப்பியது: கேஜரிவால் பேச்சு!

எனக்கு பயந்துதான் பாஜக என்னை சிறைக்கு அனுப்பியது என்று கேஜரிவால் பேசினார்.
அரவிந்த் கேஜரிவால்(கோப்பு படம்)
அரவிந்த் கேஜரிவால்(கோப்பு படம்)

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஹரியாணா மாநிலம் குருஷேத்ரத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சுஷில் குப்தாவை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தில் பேசிய கேஜரிவால்,"தான் சிறையில் அடைக்கப்பட்டதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு, தன்னைக் கண்டு பயப்படுவதே காரணம். மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மார்ச் 21 ஆம் தேதி என்னை சிறைக்கு அனுப்பினார்கள். கேஜரிவால் பிரசாரம் செய்யக்கூடாது என்று அவர்கள் நினைக்கின்றனர். என்னைக் கண்டு பயப்படுகிறார்கள்.

அரவிந்த் கேஜரிவால்(கோப்பு படம்)
அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்கினீர்கள்? ராகுல்

இங்கு(பெஹோவா) உள்ள அனைவருமே எனது உறவுகள் தான். எப்படி என்று கேட்பீர்கள்?. எனது இளைய சகோதரரும், பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மானின் மனைவி டாக்டர் குர்ப்ரீத் கவுர் பெஹோவாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்.

என்னை சிறைக்கு அனுப்பிய பாஜகவுக்கு இங்கிருந்து(பெஹோவா) ஒரு ஓட்டுகூட போகக்கூடாது" என்று அவர் கூறினார்.

ஜாமீனில் வெளிவந்த பிறகு கேஜரிவால் ஹரியாணாவுக்குச் செல்வது இதுவே முதல் முறை ஆகும். ஹரியானாவில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளுக்கும் 6 ஆவது கட்டமாக மே 25 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com