’நாடு முன்னேறியுள்ளது..’ : மோடியை புகழ்ந்த ராஷ்மிகா மந்தனா!

ராஷ்மிகா மந்தனா புகழும் இந்தியாவின் முன்னேற்றம்
’நாடு முன்னேறியுள்ளது..’ : மோடியை புகழ்ந்த ராஷ்மிகா மந்தனா!

கடலோடு நிலத்தை இணைக்கும் நாட்டின் மிகப்பெரிய பாலமான அடல் சேது, பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை இல்லையெனில் நிறைவேறியிருக்காது என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐக்கு அவர் அளித்த பேட்டியில், “இரண்டு மணி நேரப் பயணம் 20 நிமிடங்களாக குறைந்துள்ளது. யாராலும் நம்ப முடியாத விஷயம்! இது சாத்தியமாகும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நவி மும்பை முதல் மும்பை வரை, கோவா முதல் மும்பை, பெங்களூரு முதல் மும்பை, பயணம் மிகவும் எளிதாகியுள்ளது. அற்புதமான உள்கட்டமைப்புகள்! என்னை பெருமிதம் கொள்ள செய்கிறது. இந்தியா தற்போது எங்கும் நிற்க வேண்டியதில்லை. இந்தியாவில் இது சாத்தியமில்லை என யாரும் சொல்ல முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் நமது நாடு வளர்ந்திருக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் உள்ள உள்கட்டமைப்பு, திட்டங்கள் இவையெல்லாம் கடந்த 7 ஆண்டுகளில் நடந்தவை என அறிந்தேன்” என தெரிவித்துள்ளார்.

‘புஷ்பா’, ‘அனிமல்’ படங்கள் மூலம் இந்தியளவில் கவனிக்கப்படக்கூடிய நடிகையாக உயர்ந்திருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக தகவல்கள் இணையத்தில் வலம்வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com