இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவார்கள் -எதிர்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற முயற்சி -எதிர்க்கட்சிகள் மீது பாஜக அமைச்சர் குற்றச்சாட்டு
மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்
மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்கோப்புப்படம்

மக்களவை தேர்தலில் 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், பிகார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பாட்னவில் இன்று(மே.15) பேசுகையில், மேற்கு வங்க மம்தா பானர்ஜி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் போல சர்வாதிகாரத்தனமாக ஆட்சி செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தை மினி பாகிஸ்தானாக மாற்ற மம்தா முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். நடைபெறும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைத்ததும், மம்தாவின் ஆட்சியை அகற்றுவோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், எதிர்க்கட்சிகளின் ’இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவர்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் முஸ்லிம்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இணைத்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com