சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காதலை மறுத்த இளம்பெண் குத்திக் கொலை!

கர்நாடகத்தில் ஒரு மாதத்துக்குள் நடைபெற்றுள்ள இரண்டாவது ஒருதலைக் காதல் கொலை.

News image
அஞ்சலி அம்பிகாரா
Updated On :15 மே 2024, 8:48 am

DIN

கர்நாடகத்தில் காதலை மறுத்த இளம்பெண்ணை வீடு தேடிச் சென்ற இளைஞர், கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹூபள்ளி அருகே வீரப்பூர் ஓனி பகுதியில் வசித்து வருபவர் அஞ்சலி அம்பிகாரா(வயது 21). இவரை கிரிஷ் சவந்த்(வயது 23) என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவரின் காதலை அஞ்சலி ஏற்க மறுத்ததால், இன்று அதிகாலை வீட்டிற்கே சென்று கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து கிரிஷ் தப்பித்து ஓடியுள்ளார்.

இதுகுறித்து பெண்டிகேரி காவல்துறையினர் கூறுகையில், “இன்று அதிகாலை 5.45 மணியளவில் அஞ்சலி வீட்டின் கதவை கிரிஷ் தட்டியுள்ளார், அவர் கதவை திறந்ததும் கத்தியால் பல முறை குத்தி அஞ்சலியை கொன்றுவிட்டு தப்பித்து ஓடியுள்ளார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிரிஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

கடந்த மாதம் ஹூபள்ளி தனியார் கல்லூரியில் காங்கிரஸ் பிரமுகரின் மகள், காதலை ஏற்க மறுத்ததால் சக மாணவரால் கல்லூரி வளாகத்திலேயே குத்தி கொலை செய்யப்பட்டார்.

தற்போது அதேபோல் ஒருதலை காதலால் இளம்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.