பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

பொய்களை கூறி கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்வதாக மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது:  மோடி!

உத்தரப் பிரதேச மாநிலம் லால்கஞ்ச் பகுதியில் மக்களவைத் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது.

இவர்கள் நாடு பிரிவினையால் மத அடிப்படையில் நீண்ட காலமாக அகதிகளாக வாழ்ந்து பாதிக்கப்பட்டவர்கள். இந்த அகதிகளையும் காங்கிரஸ் புறக்கணிக்கிறது.

காங்கிரஸும், சமாஜ்வாதி கட்சியும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்ற பெயரில் பொய்களைப் பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயன்றனர்.

’இந்தியா’ கூட்டணியினர் ஒரு ஏமாற்றுக்காரர்கள்.குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அகற்றுவோம் என்று கூறினாலும், அதை யாராலும் செய்ய முடியாது.

நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் உங்களால் ஒருபோதும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நீக்க முடியாது” என்று கூறினார் பிரதமர் மோடி.

யார் பெயரையும் குறிப்பிடாமல் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சியினர் நாட்டை பிரிவினை வாதம் என்னும் தீயில் தள்ள முயற்சி செய்வதாகக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com