"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "
இந்தியா கூட்டணி யாரிடமும் பாகுபாடு காட்டியதில்லை. ஆனால் மோடி போன்றவர்கள் விஷத்தை கக்குகிறார்கள்.


புது தில்லி: தென் மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்டதால் நன்றி கெட்டு பேசும் பிரதமர் நரேந்திர மோடி, தற்போது தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை குறிவைத்து தென்னிந்திய மற்றும் வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
நடந்து வரும் மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில், உத்தர பிரதேசம் மாநிலம், ஜான்பூா் வியாழக்கிழமை(மே 16) நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை தினமான ஜூன் 4-ஆம் தேதிக்கு பிறகு ‘இந்தியா’ கூட்டணி துண்டு துண்டாக உடையும். காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தியின் இந்த விளையாட்டு மிகவும் ஆபத்தானது. இந்தியா கூட்டணி தலைவர்கள் உங்களிடம் வந்து வாக்கு சேகரிக்கிறார்கள். ஆனால் தென்னிந்தியாவில் வந்து பணியாற்றும் உ.பி. மக்கள் குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் தவறாக பேசுகின்றனர். அவமானப்படுத்துகிறார்கள். சனாதன தர்மானம் குறித்து தவறாக பேசுகிறார்கள்.
தமிழத்தில் திமுக, கேரளத்தில் இடதுசாரிகள், தெலங்கானா மற்றும் கர்நாடகத்தில் காங்கிரஸ் உ.பி. மக்களுக்கு எதிரான வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வருகின்றனர்.
இதுபோன்று உங்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யும் இந்தியா கூட்டணியை மன்னித்து வாக்களிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
நாட்டில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல்களுக்கு மத்தியில், "தென் மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்டதால் நன்றி கெட்டு பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடி, தற்போது தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை குறிவைத்து தென் மற்றும் வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார்".
மேலும், "கர்நாடகத்தை இந்தியாவின் மகளாக நாங்கள் கருதுகிறோம். இந்தியா கூட்டணி யாரிடமும் பாகுபாடு காட்டியதில்லை. ஆனால் மோடி போன்றவர்கள் விஷத்தை கக்குகிறார்கள்" என்று சித்தராமையா மேலும் கூறினார்.
"ஒவ்வொரு மாநில மக்களுடனும் நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு கவிழும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியதற்கு சித்தராமையா செவ்வாய்க்கிழமை கடுமையாக பதிலளித்தார்.
ஷிண்டே தனது ஆட்சி கவிழ்வதைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, தனது ஆட்சியை கவிழாமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
ஷிண்டேவின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டவை. கர்நாடகத்தில் காங்கிரசுக்கு சாதகமான அரசியல் சூழலே நிலவுகிறது. பிற மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு அழைப்பு வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், மீதமுள்ள 14 தொகுதிகளுக்கும் மே 7 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.
2019 தேர்தலில் பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது. மாநில ஆட்சியில் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...