மம்தாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்த நபரால் பரபரப்பு


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தின்போது மயங்கி விழுந்த நபரால் பரபரப்பு நிலவியது.
மேற்கு வங்க மாநிலம், பேங்குரா மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது கூட்டத்தில் முன் வரிசைகளில் அமர்ந்திருந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததை மம்தா கண்டார். உடனே தனது உரையை பாதியிலேயே நிறுத்திய மம்தா, அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸை தயார் செய்யுமாறு கட்சி நிர்வாகிகளிடம் கூறினார்.
பின்னர் அந்த நபர் சகஜநிலைக்கு வரும் வரை காத்திருந்த மம்தா, அவரை ஆம்புலன்சில் அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லும்படி உத்தரவிட்டார். அதன் பிறகே மம்தா பானர்ஜி தனது பேச்சை மீண்டும் தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...