தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்:  அரவிந்த் கேஜரிவால்

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் இன்று (மே 19) தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் திரளுமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் முன்னதாக கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில், தில்லி ஆம் ஆத்மி அலுவலகத்துக்கு அரவிந்த் கேஜரிவால் இன்று வருகை தந்தார், அப்போது அவர் பேசியதாவது:

ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளை அடுத்தடுத்து கைது செய்ய பாஜக முயற்சி செய்து வருகிறது. எங்களை அலுவலகத்தில் இருந்து விரட்டி தெருவுக்கு கொண்டு வருவதே அவர்களின் நோக்கம்.

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்:  அரவிந்த் கேஜரிவால்
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

சில நாள்களில் ஆம் ஆத்மி கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்று அமலாக்கத்துறையின் வழக்குரைஞர் முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார், இப்போது எங்கள் கணக்கை முடக்கினால் எங்களுக்கு அனுதாபம் கிடைக்கும் என்பதால், தேர்தல் முடிந்தவுடன் ஆம் ஆத்மியின் வங்கிக் கணக்குகள் முடக்குவார்கள். இவைதான் பாஜகவின் திட்டங்கள்.

நாம் பெரிதாக வளர்ந்து, அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியாக மாறக்கூடாது என்பதற்காக, 'ஆபரேஷன் ஜாது'வை பாஜக துவக்கியுள்ளது. 'ஆபரேஷன் ஜாது' மூலம், ஆம் ஆத்மி கட்சியின் பெரிய தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com