
மக்களவைக்கான ஐந்தாம் கட்டத் தேர்தலில் சராசரியாக 57.65 சதவிகித வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவைக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இன்று நடைபெற்றது.
உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிரத்தில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிகாா், ஒடிஸாவில் தலா 5, ஜாா்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதன்படி மாலை 5 மணி நிலவரப்படி நாடு முழுவதும் 56.68 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் 73 சதவிகிதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிரத்தில் 48.66 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தது. எனினும் வடக்கு மும்பை தொகுதியின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால், அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் எவ்வளவு நேரமானாலும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், 5ஆம் கட்டத் தேர்தலில் 57.65 சதவிகித (தோராய கணக்கீடு) வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநில வாரியாக...
பிகார் - 53.07%
ஜம்மு - காஷ்மீர் - 55.49
ஜார்க்கண்ட் - 63.06%
லடாக் - 67.15%
மகாராஷ்டிரம் - 49.33%
ஒடிஸா - 61.24%
உத்தரப் பிரதேசம் - 57.79%
மேற்கு வங்கம் - 73.06%
5ஆம் கட்டத் தேர்தலில் அதிகபட்சமாக மேற்குவங்கத்திலும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிரத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.