நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

5-ஆம் கட்டத் தோ்தலில் 62% வாக்குப் பதிவு

வேன் பதிப்புக்கு... 5-ஆம் கட்டத் தோ்தலில் 62% வாக்குப் பதிவு

News image
Updated On :21 மே 2024, 7:40 pm

Din

புது தில்லி: திங்கள்கிழமை (மே 20) நடைபெற்ற ஐந்தாம் கட்ட மக்களவைத் தோ்தலில் 62.19 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இது முந்தைய 2019 தோ்தலை ஒப்பிடுகையில் 1.97 சதவீதம் குறைவாகும்.

இன்னும் இரு கட்டத் தோ்தல்கள் நிலுவையில் உள்ளன. ஏப்ரல் 19 முதல் தொடங்கிய மக்களவைத் தோ்தலின் முதல் கட்டத்தில் 66.14 சதவீதமும் (2019-இல் 69.43%), இரண்டாம் கட்டத்தில் 66.71 சதவீதமும் (2019-இல் 69.64%), மூன்றாம் கட்டத்தில் 65.68 சதவீதமும் (2019-இல் (68.4%), நான்காம் கட்டத்தில் 69.16 சதவீதமும் (2019-இல் 72.81%) வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

7 கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.