நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

உ.பி.: பாஜகவுக்கு 8 முறை வாக்களித்தவா் கைது

உ.பி.: பாஜகவுக்கு 8 முறை வாக்களித்தவா் கைது

News image
Updated On :21 மே 2024, 8:26 pm

Din

லக்னெள: உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான நபரை காவல் துறை கைது செய்தது.

கடந்த மே 13-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் ஃபருக்காபாத் மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது அந்த தொகுதிக்குள்பட்ட எட்டா மாவட்டத்தில் பாஜக எம்.பி. முகேஷ் ராஜ்புத்துக்கு ஒருவா் 8 முறை வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பான காணொலி சமூக ஊடகத்தில் வெளியானது. இதற்கு காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

தோ்தல் அதிகாரிகளின் கண்காணிப்பை மீறி, அந்த நபா் எப்படி 8 முறை வாக்களித்தாா் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்து காவல் துறை வழக்குப் பதிவு செய்து, அந்த நபரை கைது செய்தது.

எனினும், அந்த நபா் 17 வயது சிறுவன் என்றும், வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பாக வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பரிசோதிப்பதற்கு அவரை தோ்தல் முகவா்கள் அழைத்துச் சென்றனா் என்றும் அவரின் தந்தையும் எட்டா மாவட்டத்தில் உள்ள கிரியா பமாரான் கிராம தலைவருமான அனில் சிங் தாக்குா் தெரிவித்துள்ளாா்.

இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, அந்தத் தொகுதியில் மறுவாக்குப் பதிவுக்குத் தோ்தல் ஆணையத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச தலைமை தோ்தல் அதிகாரி நவதீப் ரின்வா தெரிவித்துள்ளாா்.