ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி.
ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் வெளியேற்றும் (எலிமினேட்டர்) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று (மே 22) மோதின.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் டாஸில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராஜத் படிதார் 34 ரன்களும், விராட் கோலி 33 ரன்களும், மஹிபால் லோம்ரோர் 32 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளும், ரவி அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரோமன் பவெல் 4 கேட்சுகளை பிடித்து அசத்தினார்.

மேலும், 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com