பாஜக பெண் தொண்டர் கொலை: சாலை மறியல்

மேற்கு வங்கத்தில் பாஜக பெண் தொண்டர் கொலை செய்யப்பட்டார்.
பாஜக பெண் தொண்டர் கொலை:  சாலை மறியல்

மேற்குவங்க மாநிலம் புர்பா மேதினிப்பூர் மாவட்டம் நந்திகிராமில் பாஜக பெண் தொண்டர் கொல்லப்பட்டதால், அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

நந்திகிராமில் பாஜக தொண்டரான ரதிராணி அரி(38), திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களால் கொல்லப்பட்டதையடுத்து, பாஜகவினர் கடையடைப்பு, சாலை மறியல், டயர் எரிப்பு உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக நந்திகிராமில் 'பந்த்' அறிவிக்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டதாக உள்ளூர் பாஜக தலைவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில்,''நேற்று இரவு ஒரு உள்ளூர் வாக்குச் சாவடியைப் பாதுகாக்கும் பொறுப்பு ரதிராணி மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது. அடையாளம் தெரியாத, மோட்டார் சைக்கிளில் ஆயுதம் ஏந்தி வந்தவர்கள் புதன்கிழமை இரவு அவர்களைத் தாக்கியதில் ரதிராணி கொல்லப்பட்டு, பலர் காயமடைந்தனர். திரிணமூல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்த 7 பேரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்'' என்றார்.

நந்திகிராமில் திரிணமூல் தலைவர் ஸ்வதேஷ் தாஸ், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். சில குடும்ப தகராறுகள் இருந்ததாகவும், அதன் விளைவாக கொலை நடந்திருக்கலாம் என்றும் கூறினார்.

துணை ராணுவப் படையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

தம்லுக் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு சனிக்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com