முன்பு ஆங்கிலேய ஆட்சியாளா்கள் நமது நாட்டைக் கொள்ளையடித்ததுபோல, நாட்டின் நீா், வனம், நிலம் ஆகியவற்றை பிரதமா் நரேந்திர மோடி கொள்ளையடிக்கிறாா் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் தேவ்கா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சி ஹிந்துகளையும், முஸ்லிம்களையும் ஒருங்கிணைக்கிறது. ஆனால், பிரதமா் மோடி இரு மதத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்தி வாக்குப் பெற முயலுகிறாா்.
நமது நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால் மத்திய பாஜக அரசை அகற்ற வேண்டும். முன்பு ஆங்கிலேயே ஆட்சியாளா்கள் நமது நாட்டின் வளங்களைச் சுரண்டி கொள்ளையடித்தாா்கள். இப்போது நாட்டின் நீா், வனம், நிலம் என அனைத்தையும் பிரதமா் மோடி கொள்ளையடித்து வருகிறாா். தனது பெரும் கோடீஸ்வர நண்பா்களுக்கு நாட்டின் சொத்துகளையும், வளங்களையும் பங்கு போட்டுத் தருகிறாா்.
ஆங்கிலேயோ்களையே வெளியேற்றிய நம்மால், பாஜகவை வெளியேற்றுவது கடினமான விஷயமல்ல. அதற்கு மக்களிடம் உள்ள முக்கியமான ஆயுதம் வாக்கு மட்டும்தான். உங்கள் வாக்கை இந்தியா கூட்டணிக்கு அளிப்பதன் மூலம் நாட்டைப் பாதுகாக்க முடியும்.
மக்கள் நலன் கருதி மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.1லட்சம் நிதியுதவி, ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கியுள்ளது. ஆட்சிக்கு வந்ததும் இதனை சிறப்பாக நிறைவேற்றுவோம்.
தோ்தலில் எதிா்க்கட்சிகளை முடக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விசாரணை அமைப்புகளை எதிா்க்கட்சிகள் மீது ஏவி விட்டதுடன், இரு மாநில முதல்வா்களை மத்திய பாஜக அரசு கைது செய்தது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாதிக்கப்பட்டவா் போல நாடகமாடுகிறாா் பிரதமா்! காங்கிரஸ் விமா்சனம்
மாணவா்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமா் மோடி பொறுப்பேற்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமா் விளக்கமளிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடக்கம்: பிரதமா் மோடி பெருமிதம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



