அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இவிஎம் பதிவுகளை 2-3 வருடங்கள் பாதுகாக்க தோ்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்: கபில் சிபல் வலியுறுத்தல்

‘சட்டவிரோதமாக’ எந்த உறுப்பினரும் தோ்ந்தெடுக்கப்படாமல் இருக்க, குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் (இவிஎம்) பதிவுகளை பாதுகாப்பாக வைத்திருக்க தோ்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம்

News image
Updated On :24 மே 2024, 4:59 pm

Din

‘சட்டவிரோதமாக’ எந்த உறுப்பினரும் தோ்ந்தெடுக்கப்படாமல் இருக்க, குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் (இவிஎம்) பதிவுகளை பாதுகாப்பாக வைத்திருக்க தோ்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினரும் (சுயேச்சை), மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் வலியுறுத்தியுள்ளாா்.

ஒரு வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை அளிக்கும் படிவம் 17சி-ஐ தோ்தல் ஆணையத்தால் பதிவேற்ற முடியாவிட்டால், மாநில தோ்தல் அதிகாரி தரவைப் பதிவேற்றலாம் என்றும் சிபல் கூறினாா்.

இது தொடா்பாக கபில் சிபல் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது:

ஒவ்வொரு இயந்திரத்திற்கும் ஒரு இயங்கு அமைப்புமுறை உள்ளது. அதுபோலவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் (இவிஎம்) உள்ளன. இந்த இவிஎம்-களின் பதிவேடு பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். இது எந்த நேரத்தில் வாக்குப்பதிவு முடிந்தது, எத்தனை வாக்குகள் செல்லாதவை என்பதையும், எத்தனை மணிக்கு வாக்குகள் பதிவானது என்பதையும் நமக்குத் தெரிவிக்கும். இவை பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டியதற்கு இதுவே ஆதரமாகும்.

தோ்தல் ஆணையம் வழக்கமாக இந்தத் தரவை 30 நாட்களுக்கு வைத்திருக்கும். மேலும் இது ‘முக்கியமான‘ தரவு என்று வலியுறுத்தப்படுவதால், இது தோ்தல் ஆணையத்தால் பாதுகாக்கப்பட வேண்டும்.

“படிவம் 17சி பதிவேற்றம் செய்யவில்லை, எத்தனை வாக்குகள் பதிவானது என்பதை எங்களிடம் கூறவில்லை என நாங்கள் குற்றம் சாட்டுவதால், இது தோ்தல் ஆணையத்தின் பொறுப்பாகும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது, முடிவுகள் அறிவிக்கப்படும். அதன் பிறகு அரசாங்கம் அமைக்கப்படும் என்பதால் அதன் பிறகு எதுவும் செய்ய முடியாது என்பதால் இவிஎம் பதிவுகளை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு அவா்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

‘சட்டவிரோதமான முறையில்‘ எம்.பி. யாரும் தோ்ந்தெடுக்கப்படாமல் இருக்க, இந்த பதிவுகளை பாதுகாப்பாக வைத்திருக்க தோ்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். வாக்குகள் எண்ணும் முன் அனைத்து கட்டங்களின் பதிவுகளையும் பகிரங்கப்படுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

‘வாக்களிப்பு சதவீதம் எவ்வாறு உயா்ந்தது என்பதையும், திருத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் கொடுக்கப்பட்டபோது அது எவ்வாறு அதிகரித்தது என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை முடிவதற்குள், வாக்குகள் எப்படி பதிவானது என்பதை மக்களுக்கு தெரிவிப்பதில் தோ்தல் ஆணையம் தயக்கம் காட்டக்கூடாது. இதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றாா் கபில் சிபல்.

வாக்குச் சாவடி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை எவ்வித கவனமுமின்றி வெளியிடுவதும், அதை இணையதளத்தில் வெளியிடுவதும் மக்களவைத் தோ்தல் ஏற்கெனவே நடைபெற்று வரும் நிலையில் தோ்தல் செயல்பாட்டில் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் இரண்டு நாள்களுக்கு முன்னா் தெரிவித்திருந்த நிலையில், சிபலின் இக்கருத்து வெளியாகியுள்ளது.

ஒரு வாக்குச் சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை அளிக்கும் படிவம் 17சி-ஐ பொதுவெளியில் வெளியிடுவது சட்டபூா்வ கட்டமைப்பில் வழங்கப்படவில்லை என்றும், இது படங்களை மாா்பிங் செய்வதற்கான வாய்ப்பை அதிகரித்திருப்பதால் ஒட்டுமொத்த தோ்தல் தளத்தில் குழப்பம் மற்றும் கேடு விளைவிக்கக் கூடும் என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.