ஜம்மு-காஷ்மீரில் விரைவில் பேரவைத் தேர்தல் நடத்த ஏற்பாடு: ராஜீவ் குமார்

ஜம்மு-காஷ்மீரில் விரைவில் பேரவைத் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார் தலைமை தேர்தல் ஆணையர்
ஜம்மு-காஷ்மீரில் விரைவில் பேரவைத் தேர்தல் நடத்த ஏற்பாடு: ராஜீவ் குமார்
Manvender Vashist Lav

ஜம்மு - காஷ்மீரில் விரைவில் பேரவைத் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று மக்களவைத் தேர்லின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவின்போது, இன்று காலை வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை செலுத்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

மக்களவைத் தேர்தலின்போது, ஜம்மு - காஷ்மீரில் பதிவான வாக்குகள் உற்சாகத்தை அளிக்கின்றன. எனவே, மிக விரைவாக யூனியன் பிரதேசத்தில் பேரவைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று ராஜீவ் குமார் கூறினார்.

ஜம்மு - காஷ்மீர் மக்கள், அவர்களுக்கான அரசை அவர்களே தேர்வு செய்துகொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இது என் காதுகளில் ஒரு இசையைப் போல ஒலிக்கிறது, மக்கள், இளைஞர்கள், மகளிர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து, பெரிய அளவில் வாக்குச் சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஜனநாயகம் என்ற மரத்தின் ஆனிவேரானது மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்கும்போதுதான் பலமாகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com