'22 பேரின் கடனை தள்ளுபடி செய்த பிரதமரால் பருவமழை நிவாரணம் கொடுக்க முடியவில்லை'

22 பேரின் கடனை தள்ளுபடி செய்த பிரதமர் மோடி.
'22 பேரின் கடனை தள்ளுபடி செய்த பிரதமரால் பருவமழை நிவாரணம் கொடுக்க முடியவில்லை'

10 ஆண்டுகளில் 22 பேரின் கடனை தள்ளுபடி செய்த பிரதமரால் ஹிமாச்சல பிரதேச மாநிலத்துக்கு பருவமழை நிவாரணம் கொடுக்க முடியவில்லை என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இறுதிகட்ட மக்களவைத் தேர்தலையொட்டி ஹிமாச்சல பிரதேச மாநிலம், நஹானில் இன்று நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய அவர், ஆப்பிள் விலையைக் கட்டுப்படுத்த அனைத்து சேமிப்பு வசதிகளையும் ஒருவரிடம் மோடி ஒப்படைத்துவிட்டார்.

மோடி பதவியேற்கும் போதெல்லாம் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் விலை உயரும்.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். ஏழைக் குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் வரும் வரை ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

நாட்டில் உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்காக அரசு துறைகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

நான்கு மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர் ஊடகங்கள் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com