ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு! மதுரை நகைக்கடை திருட்டு! இருவர் கைது! திருடனை அடையாளம் கண்டது எப்படி?விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த தமிழகம்: டிடிவி தினகரன் விமர்சனம் மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

மதுபானக் கூடத்தில் பாடல் ஒலிபரப்புவதில் தகராறு: டிஜே சுட்டுக்கொலை!

சிசிடிவி காட்சிப்படம்

Updated On :

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் செயல்பட்டு வரும் மதுபானக் கூடம் ஒன்றில் சந்தீப் என்ற இளைஞர் பாடல்களை ஒலிபரப்பும் ’டிஜே’ ஆக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அந்த மதுபானக் கூடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை(மே 27) நள்ளிரவில் அப்பகுதியை சேர்ந்த 5 பேர் மது அருந்தச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்போது போதை தலைகேறிய நிலையில், பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருந்த சந்தீப்பிடம் அவர்கள் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. தாங்கள் விரும்பிய பாடல்களை ஒலிபரப்ப வேண்டுமென்று சந்தீப்பை அவர்கள் கட்டாயப்படுத்தியுள்ளதாகவும், இதற்கு சந்தீப் மறுப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, சந்தீப்புக்கும் மது போதையில் இருந்த ஆசாமிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை மதுபானக்கூட ஊழியர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த கும்பலை சேர்ந்த அபிஷேக் சிங் என்பவர் நள்ளிரவு வேளையில் மீண்டும் மதுபானக் கூடத்திற்கு சென்றுள்ளார். உள்ளே புகுந்த அவர், தான் எடுத்துச் சென்றிருந்த நாட்டுத் துப்பாகியால் சந்தீப்பை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார்.

அரைநிர்வாணக் கோலத்தில் மதுபனக் கூடத்திற்கு வந்திருந்த அபிஷேக் சிங் தனது துப்பாக்கியால் சந்தீப்பின் மார்பில் குறிபார்த்துச் சுடும் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.திங்கள்கிழமை(மே 27) அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திலேயே சந்தீப் உயிரிழந்ததார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், தப்பியோடிய நபரை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், தப்பியோடிய நபர் பிகார் மாநிலம் கயாவில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ராஞ்சி காவல்துறை கயாவில் இருந்த அபிஷேக் சிங்கை கைது செய்து விசாரணைக்காக ராஞ்சிக்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும், அவரிடம் கொலைக்கான காரணம் என்ன உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.