மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அமேசானில் ரூ.13,000 தள்ளுபடியில் ஐஃபோன் 15 மாடல்!

ஐஃபோன் 15 மாடலுக்கு அமேசான் கூடுதல் தள்ளுபடியை அறிவித்திருக்கிறது.

News image

ஐஃபோன் மாடல்

Updated On :28 மே 2024, 9:31 am

ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசானில், ஐஃபோன் 15 மாடலுக்கு நேரடியாக ரூ.8,901 தள்ளுபடி அளிப்பதாகவும், இதனுடன், வங்கித் தள்ளுபடி, புதியதை கொடுத்து பழைய போனை மாற்றுவதற்கான சலுகை என பல கிட்டத்தட்ட ரூ.13000 ஆளவுக்கு தள்ளுபடி கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஆனால், மிகக் குறைவான நேரமே இருப்பதால், இந்த தள்ளுபடி கிடைத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்.

ஐஃபோன் 15 மாடலை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளீர்களா? இந்த சலுகை உங்களுக்குத்தான். அண்மையில் வெளியான புதிய மாடல் ஐஃபோன் 15 ரூ.8,901 விலைத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதன் விலை ரூ.70,999 ஆக மாறியிருக்கிறது. இதனுடன், அமேசான் நிறுவனம், கூடுதலாக ரூ.4,000 தள்ளுபடி அளிக்கிறது. இதன் மூலம், சுமார் 13 ஆயிரத்துக்கு விலை தள்ளுபடியுடன் ஆப்பிள் ஐஃபோன் வாங்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.

மிகக் குறுகிய காலத்துக்குத்தான் இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியில் ஐஃபோன் வாங்க வேண்டுமென்றால் விரைவாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

தற்போது, அமேசானில் ரூ.70999க்கு ஐஃபோன் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் உண்மையான விலை ரூ.79,999. இந்த செல்ஃபோனை எஸ்பிஐ கிரெடிட் கார்டு கொண்டு வாங்கினால், இதன் விலை ரூ.66,999 வரை குறையக்கூடும். அதுபோல ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு வைத்திருந்தாலும் இதே விலைக்குப் பெறலாம். இஎம்ஐ தேர்வு செய்தால் ரூ.68,792க்கும் கிடைக்கும்.

ஏற்கனவே பயன்படுத்தும் ஸ்மார்ட்ஃபோனை பெற்றக்கொண்டும் புதிய போனை வாங்கலாம். அதற்கு சில நிபந்தனைகளுடன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, நேரடி தள்ளுபடி, அமேசான் தள்ளுபடி, கிரெடிட் கார்டு தள்ளுபடி என பல தள்ளுபடிகளை ஒன்றாகப் பயன்படுத்தி ஐஃபோனை தனதாக்கிக் கொள்ளலாம் அதிர்ஷ்டசாலிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.