திருவாதவூரர் என்ற மாணிக்கவாசகப் பெருமான் இறைவனை உருகிப் பாடிய திருமுறைப் பாடல்களே திருவாசகம்.
காலங்கள் தோறும் இதன் புகழ் உலகெங்கும் பரவிய வண்ணம் உள்ளது என்பதே இதன் சிறப்புக்கு அடையாளம். எட்டாம் திருமுறையில் இரண்டாம் பதிகமாக அமைவது கீர்த்தித் திருஅகவல். சிவனது திருவருள் புகழ்ச்சி முறைமையை தில்லையில் பாடினார் மாணிக்கவாசகர்.
இப்பதிகத்தில் "ஓரி' எனப்படும் திருத்தலத்தில் தனது பக்தையைக் காக்க பரம்பொருளாகிய இறைவன் பச்சிளம் பாலகனாக வடிவெடுத்த அற்புதம் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவிளையாடல் புராணத்தில் "விருத்த குமார பாலர் ஆன படலம்' என்று இந்த வரலாறு விளக்கப்பட்டுள்ளது.
இதனால் ஓரியூர் திருக்கோயில் இறைவர் சேயும் ஆனவர் என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் பெயர் மட்டுவார் குழலியம்மை. மேற்குப் பார்த்த கோயில். மாதாந்திர பெüர்ணமியன்று சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.
இங்கு வந்து தரிசிப்பவர்களுக்கு வாழ்க்கையில் தொடரும் சகலவிதமான துன்பங்களும் விலகும். கன்னிப் பெண்களுக்கு மனதுக்கேற்ற மணாளன் வரனாக அமைவான். குழந்தை பாக்கியம் இல்லாமல் வருந்தும் தம்பதியர்க்கு நல்ல சந்தான பாக்கியம் கிடைக்கும். நோய்கள் அகன்று பூரண நலம் கிடைக்கும். இளமையும், தீர்க்க ஆயுளும் கிட்டும் என்பது நம்பிக்கை.
மதுரை மாட்டுத்தாவணி, திருவாடானை, தேவகோட்டை, சுந்தரபாண்டியன் பட்டிணம் ஆகிய ஊர்களில் இருந்து ஓரியூருக்கு நேரடிப் பேருந்து போக்குவரத்து உள்ளது.
வெ. கணேசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அரிதான ரத்தினம்

வேந்தன்பட்டி நெய்நந்தீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

அதிருப்தியாளா்களால் அதிா்ச்சியில் அரசியல் கட்சிகள்

ரூ. 30 ஆயிரத்திற்குக் கீழ் சந்தையில் கிடைக்கும் சிறந்த மடிக்கணினிகள் எவை?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


