வரலாறு காணாத வெப்பநிலை, மிதமான மழையை எதிர்கொண்ட தில்லி!

நாட்டின் தலைநகரில் 52.3 டிகிரி செல்சியஸ் பதிவானது. மிதமான மழை ஆறுதல். மின்சார தேவை அதிகம்.
தில்லி வெப்பநிலை
தில்லி வெப்பநிலைபடம்: எக்ஸ்பிரஸ்

நாட்டின் தலைநகர் தில்லியில் வெப்பநிலை வரலாறு காணாதளவு 52.3 டிகிரி செல்சியஸ் (122.9 பாரன்ஹீட்) பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் நகர்ப்புறமான முங்கேஷ்பூரில் 52.3 டிகிரி புதன்கிழமை பிற்பகல் பதிவானதாகவும் இந்தளவு வெப்பநிலையை நகரம் எதிர்கொள்வது இதுவே முதல்முறை எனவும் வானிலை மையம் தெரிவித்தது.

அதிகரிக்கும் வெப்பநிலைக்கான காரணம் குறித்து விவரிக்கும் வானிலை மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவஷ்டவா, ராஜஸ்தானில் இருந்து உருவாகி வரும் சூடான காற்று பாதிக்கும் முதலிடமாக தில்லியின் நகர்ப்புறங்கள் அமைந்துள்ளன என்றார்.

தில்லி வெப்பநிலை
தில்லி வெப்பநிலைANI

குல்தீப், “தில்லியின் சில பகுதிகள் இந்த சூடான காற்றின் வருகையை எளிதில் எதிர்கொள்ளும் இடத்தில் உள்ளன. ஏற்கெனவே அதிகரித்துவரும் வெப்பநிலையை சூடான காற்று இன்னும் அதிகரிக்கிறது. முங்கேஷ்பூர், நரேலா மற்றும் நஜ்ஃப்கர் ஆகிய பகுதிகள் முதல்முறையாக வெப்ப அலைகளின் முழு ஆற்றலை எதிர்கொள்கின்றன” என தெரிவித்துள்ளார்.

ஸ்கைமெட் தனியார் நிறுவனத்தின் வானிலை மற்றும் காலநிலை மாற்றத்தின் துணை தலைவர் மகேஷ் பலாவத், “திறந்த வெளியாக இருக்கும் காலியிடங்களில் கதிர்வீச்சு அதிகரித்து காணப்படுகிறது. நேரடியான சூரிய ஒளி மற்றும் நிழல் இல்லாததால் இந்த பகுதிகள் அதிகளவிலான வெப்பத்தை எதிர்கொள்கின்றன” என குறிப்பிட்டுள்ளார்.

வெப்பநிலை உயர்வால் இதுவரை இல்லாதளவு மின்சார தேவை தில்லியில் அதிகரித்துள்ளது. 8,302 மெகாவாட் அளவுக்கு தில்லியின் மின்சார தேவை உயர்ந்துள்ளது. நிறுவனங்கள் கணித்த அளவான 8,200 மெகாவாட்டை விட இது கூடுதல்.

வடக்கு மாநிலங்களின் பல பகுதிகளில் அதிகரித்துவரும் வெப்பநிலையை கருத்தில்கொண்டு வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்தது.

தில்லி வெப்பநிலை
தில்லி வெப்பநிலைANI

மிகுதியான வெப்ப அலைகளையும் சற்றே குறைவான மழைப்பொழிவையும் புதன்கிழமை தில்லி எதிர்கொண்டது. சிறியளவிலான மழைப்பொழிவு சற்றே ஆறுதல் அளித்தது.

மே 30-ம் தேதி இந்த வெப்பநிலையிலிருந்து வானிலை மீளலாம் என வானிலை மையம் கணித்துள்ளது.

வடகிழக்கு பகுதிகளில் எதிர்பார்க்கப்படும் மேற்குபகுதிலிருந்து உருவாகும் காற்றால், மழைப்பொழிவு சில பிராந்தியங்களில் வார இறுதியில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com