பொதுக்கூட்டத்தில் மயக்கமுற்ற இளைஞர்: பேச்சை நிறுத்திய மோடி!

பொதுக்கூட்டத்தில் மயக்கமுற்ற இளைஞர்: உடனடியாக மருத்துவ உதவி
ஒடிசாவில் மோடி
ஒடிசாவில் மோடிANI

ஒடிசா பரிபாடா பகுதியில் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் மோடியின் பேச்சின் இடையே மயக்கமுற்றதையடுத்து தனது பேச்சை நிறுத்திய மோடி இளைஞருக்கு மருத்துவ குழுவினை சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

டோலாகோவிந்த பாரிக் என்கிற பத்திரிக்கையாளர் மோடி பேசிக்கொண்டிருக்கும்போது மயக்கமடைந்துள்ளார். அதனை கவனித்த மோடி, பேச்சை நிறுத்தி மயக்கமுற்றவருக்கு காற்று கிடைக்க இடைவெளி அளிக்குமாறு கூட்டத்தினருக்கு அறிவுறுத்தினார்.

மயக்கமுற்ற இளைஞருக்கு பிரதமரின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்தது. பின்னர் அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட இளைஞர் குணமடைந்ததும் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

நாளின் உச்சபட்ச வெயிலால் அவர் மயக்கமடைந்துள்ளார். பரிபாடா பகுதியில் வெப்பநிலை 39.5 டிகிரி செல்சியஸாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com