மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசாவில் பிரதமர் மோடி இன்று பிரசாரம்!

ஜார்க்கண்ட், மேற்குவங்கத்தைத் தொடர்ந்து இன்று ஒடிசாவில் பிரதமர் மோடி பிரசாரம்...

News image
Updated On :29 மே 2024, 6:15 am

ஒடிசாவில் இன்று பிற்பகல் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டதையடுத்து, இன்று காலை 11 மணியளவில் மதுராபூரிலும், அதன்பின்னர் ஒடிசாவில் பிற்பகல் 1 மணிக்கு மயூர்பஞ்சிலும், பிற்பகல் 2.30 மணிக்கு பாலசோரிலும், மாலை 4.30-க்கு கேந்த்ராபரிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.

இதற்கிடையில், உள்துறை அமைச்சர் உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் காலை 11.30 மணிக்கும், தியோரியாவில் மதியம் 1.15 மணிக்கும், பல்லியாவில் பிற்பகல் 2.30 மணிக்கும் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார். மற்றும் சோன்பத்ராவில் மாலை 4.30 மணிக்கும், பின்னர், காஜிபூரில் மாலை 6.00 மணிக்குத் தொடங்கும் பேரணியில் கலந்துகொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.