ஜாமீன் கோரி கேஜரிவால் மீண்டும் மனுத் தாக்கல்!

இடைக்கால ஜாமீனை மேலும் நீட்டிக்கக் கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதிய மனு..
ஜாமீன் கோரி கேஜரிவால் மீண்டும் மனுத் தாக்கல்!

இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தில்லி மதுபான (கலால்) கொள்கை ஊழல் தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்ட வழக்கில் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தில்லி திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்தார்.

மக்களவைத் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்பதற்காக கேஜரிவாலுக்கு ஜூன் 1-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீனை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் வழங்கியது. இந்த நிலையில் இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ஜாமீன் கோரி கேஜரிவால் மீண்டும் மனுத் தாக்கல்!
நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்: நவீன் பட்நாயக்

ஆனால் உச்சநீதிமன்றம் கேஜரிவாலின் மனுவை நிராகரித்தது. ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை நாடலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

அதனடிப்படையில், இடைக்கால ஜாமீனை மேலும் நீட்டிக்கக் கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விசாரணை நீதிமன்றமான தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com