ராஜஸ்தானை வாட்டி வதைக்கும் வெயில்: 7 நாள்களில் 55 பேர் பலி!

ராஜஸ்தானில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
ராஜஸ்தானை வாட்டி வதைக்கும் வெயில்: 7 நாள்களில் 55 பேர் பலி!

கடந்த ஏழு நாள்களில் 55 பேரும், முழுமையான கோடை காலத்தில் 122 பேரும் கடுமையான வெப்பத்தால் பலியாகியுள்ளனர்.

அக்னி நட்சத்திரப் போல் கருதப்படும் நௌதபாவின் ஐந்தாம் நாளான நேற்று, ஒன்றரை வயது குழந்தை, ஊர்த் தலைவர் உள்பட 6 பேர் கடுமையான வெயிலுக்கு பலியாகினர். நௌதபா என்பது மே - ஜூன் மாதங்களில் ரோகிணி நட்சத்திரத்தில் சூரியன் நுழையும் ஒன்பது வெப்பமான நாள்கள் என்பதைக் குறிக்கிறது.

வெப்பம் காரணமாக புதன், வியாழக்கிழமைகளில் 20 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், ராஜஸ்தானின் சுருவில் வரலாறு காணாத அதிகபட்ச வெப்பநிலையான 50.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கங்காநகர், பலோடி, பிலானி ஆகிய பகுதிகளிலும் 49 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இது இயல்பை விட 7.5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்

ராஜஸ்தானை வாட்டி வதைக்கும் வெயில்: 7 நாள்களில் 55 பேர் பலி!
தில்லியின் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஜெய்ப்பூர் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ராதேஷ்யாம் சர்மா கூறுகையில், “பஞ்சாப், ஹரியாணா, தில்லியை ஒட்டிய பகுதிகள் வெப்ப அலையால் அதிக சிக்கல்களை எதிர்கொள்கின்றன. ராஜஸ்தானில் இன்று வெப்பநிலையில் சற்று தணிந்துள்ளது. வரும் நாட்களில் வெப்பம் மேலும் குறையும்” என்றார்.

அதிக வெப்பம் காரணமாக மின்சாரம், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 40 மாவட்டங்கள் கடுமையான குடிநீர் பஞ்சத்தை சந்தித்து வருகின்றன. மத்திய நிலத்தடி நீர் துறையின் அறிக்கையில், ராஜஸ்தானின் மூன்றில் இரண்டு பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.

பெரும்பாலான நகரங்களில் போதுமான குடிநீர் கிடைப்பதில்லை என்பதைக் காட்டும் ஆபத்தான புள்ளிவிவரங்களையும் நீர் வழங்கல் துறையின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com