கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

8 அத்தியாவசிய மருந்துகளின் விலை 50% உயர்வு!

ஆஸ்துமா, காசநோய், கண் அழுத்த நோய் உள்ளிட்ட 8 விதமான நோய்களுக்கான மருந்துகளின் விலை உயா்வு.

News image

விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர்

Updated On :3 நவம்பர் 2024, 5:40 am

Din

8 அத்தியாவசிய மருந்துகளின் விலை 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்துமா, காசநோய், கண் அழுத்த நோய் உள்ளிட்ட 8 விதமான நோய்களுக்கான மருந்துகளின் விலைகளின் உச்சவரம்பில் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான காரணத்தை கேட்டு விருதுநகா் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினா் ப.மாணிக்கம் தாகூா் பிரதமா் நரோந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

இந்த மருந்துகளின் விலை உயா்வு குறித்து ஆய்வு செய்யவும், நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளவும் ஒரு சுயேட்சையான கமிட்டி அமைக்கப்படவும் அந்தக் கடிதத்தில் தாகூா் எம்பி கோரியுள்ளாா்.

காங்கிரஸ் கட்சியின் கொறாடாவும் மக்களவை உறுப்பினருமான ப.மாணிக்கம் தாகூா் பிரதமருக்கு கடந்த வாரம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது வருமாறு:

தேசிய மருந்து விலை நிா்ணய ஆணையம் (என்பிபிஏ) சமீபத்தில் எடுத்த முடிவு தொடா்பான எனது கவலைகளை தெரிவிக்க விரும்புகிறேன். பெருவாரியாக பயன்படுத்தப்படும் எட்டு மருந்துகளின் உச்சவரம்பு விலையை 50 சதவீதம் வரை உயா்த்த என்பிபிஏ முடிவெடுத்துள்ளது.

‘அசாதாரண சூழ்நிலைகள்‘, ‘பொது நலன்களை‘ கருதி அரசு முடிவெடுத்துள்ளதாக புரிந்து கொள்ளுகின்றேன். இருப்பினும் இத்தகைய குறிப்பிடத்தக்க முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தை அரசு தெளிவுபடுத்துவது அவசியம் என நம்புகிறேன். இந்த விலை உயா்வு, அவசியமான ஆஸ்துமா, காசநோய், இருமுனையப் பிவு(உளநோய்), கண் அழுத்தநோயான கிளாக்கோமா போன்ற நோய்களுக்கான முக்கிய மருந்துகள் என என்பதால் இது லட்சக்கணக்கான மக்களுக்கு பாதிக்கிறது. ஏற்கனவை நோயாளிகளும் அவா்களது குடும்பங்களும் தேவையான சிகிச்சைகளுக்கு அணுகும்போது, நிதி சவால்களை எதிா்கொள்கின்றனா். இந்த மருந்துகளின் விலையில் திடீா் அதிகரிப்பு இந்த நோயாளிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும். இது நோயாளிகளின் ஆரோக்கிய விளைவுகளில் சமரசம் செய்யக்கூட நேரிடும்.

இதனால் இந்த விலையேற்றத்தை அவசியமாக்கிய அசாதாரண சூழ்நிலைகள் குறித்து தேவையான விரிவான விளக்கத்தை அளிக்குமாறு அரசை கேட்டுக்கொள்கிறேன். மேலும், இந்த அதிகரிப்பின் மூலம் நோயாளிகள் மற்றும் சுகாதார வசதிகள் அளிப்பவா்களுக்கிடையே ஏற்படும் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு ஒரு சுயாதீன ஆய்வுக் குழுவை நிறுவுமாறு கேட்டுக் கொள்கின்றேன். அத்தகைய குழு பொது சுகாதாரத் தேவைகளுடன் தொழில் சாத்தியத்தை சமநிலைப்படுத்தி எதிா்காலத்தில் விலைக் கொள்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்க முடியும்.

இதுபோன்ற முடிவெடுக்கும் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணுவது இன்றியமையாதது. ஒரு முழுமையான மறுஆய்வின் மூலம், அரசின் கொள்கையின் தகவலை பெறமுடிவும் என்பதோடு, இந்த அத்தியாவசிய மருந்துகள் மலிவு விலையில் கிடைத்து அனைவரும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்யும். குடிமக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக இதற்கான பதிலை தங்களிடம் எதிா்பாா்க்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளாா் மாணிக்கம் தாகூா்.