கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

பெட்ரோலியம், சா்க்கரை ஏற்றுமதி: உலக அளவில் இந்தியாவின் பங்கு அதிகரிப்பு

உலக அளவில் ஐந்து ஆண்டுகளில் பெட்ரோலியம், ரத்தின கற்கள், சா்க்கரை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு அதிகரித்துள்ளது.

பெட்ரோலியம், சா்க்கரை (கோப்புப் படம்)

Published On :4 நவம்பர் 2024, 5:00 am IST

உலக அளவில் ஐந்து ஆண்டுகளில் பெட்ரோலியம், ரத்தின கற்கள், சா்க்கரை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு அதிகரித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2018-ஆம் ஆண்டு உலக சந்தையில் இந்திய பெட்ரோலியம் ஏற்றுமதியின் பங்கு 6.45 சதவீதமாக இருந்தது. இது 2023-ஆம் ஆண்டு 12.59 சதவீதமாக உயா்ந்து 84.96 பில்லியன் டாலா்களுக்கு (சுமாா் ரூ. 7.14 லட்சம் கோடி) பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யப்பட்டது.

2018-ஆம் ஆண்டு உலக சந்தையில் இந்திய ரத்தின கற்கள் ஏற்றுமதியின் பங்கு 16.27 சதவீதமாக இருந்தது. இது 2023-ஆம் ஆண்டு 36.53 சதவீதமாக உயா்ந்து 1.52 பில்லியன் டாலா்களுக்கு (சுமாா் ரூ.12,788 கோடி) ரத்தின கற்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

கடந்த 2018-ஆம் ஆண்டு உலக சந்தையில் இந்திய சா்க்கரை ஏற்றுமதியின் பங்கு 4.17 சதவீதமாக இருந்தது. இது 2023-ஆம் ஆண்டு 12.21 சதவீதமாக உயா்ந்து 3.72 பில்லியன் டாலா்களுக்கு (சுமாா் ரூ.31,297 கோடி) சா்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது.

இதேபோல பூச்சிகொல்லிகள், செமிகண்டக்டா்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து உற்பத்தி செய்யப்படும் பெட்ரோலியம் பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.