24 ஊர்க்காவலர் பணிக்கு 21,000 விண்ணப்பங்கள்! உத்தரகண்ட் வேலையில்லா திண்டாட்டம்!

உத்தரகண்ட்டில் 24 ஊர்க்காவல் படை பயிற்றுவிப்பாளர் பணிக்கு 21 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

உத்தரகண்ட்டில் 24 ஊர்க் காவல் படை பயிற்றுவிப்பாளர் பணிக்கு 21 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதில், 70 சதவீத விண்ணப்பங்கள் முதுநிலை பட்டம் பெற்றவர்களுடையது என்ற சோகமான செய்தி, உத்தரகண்ட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தையே காட்டுகிறது.

ஊர்க்காவல் படை பயிற்றுவிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 முடித்திருந்தால் போதுமானது என அரசுத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பணிக்குத் தற்போது எம்.டெக்., எம்.எஸ்சி., பி.எஸ்சி., உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளனர்.

அதிக பட்டதாரிகள் விண்ணப்பம்

உத்தரகண்ட்டில் உள்ள கர்வால் மண்டலத்தில் மட்டும் அதிகபட்சமாக 12,000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. குமாவோன் மண்டலத்தில் 8,500 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறு அதிகம் படித்தவர்கள் அடிப்படை தகுதிகள் மட்டுமே தேவைப்படும் வேலைக்கு விண்ணப்பித்துள்ளது, பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு குறைந்து வருவதையே குறிக்கிறது.

உத்தரகாசியைச் சேர்ந்த ராஜீவ் செம்வால் இது குறித்து கூறியதாவது, நான் எம்.எஸ்சி., கணிதவியலில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றவன். போட்டித் தேர்வுகளுக்காக தொடர்ந்து பல ஆண்டுகளாக முயற்சித்து தொடர் தோல்விகளே கிடைத்தன. வேலைவாய்ப்புக்கு எனது வயது ஒரு தடையாகிவிடக்கூடாது என்பதற்காக ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பித்துள்ளேன் எனக் குறிப்பிட்டார்.

ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்புக்கு தகுதியாக 18 - 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், பல இளைஞர்கள் இதில் வேலையைப் பெற்றுவிட வேண்டும் என்ற நம்பிக்கையில் விண்ணப்பித்துள்ளனர்.

வேலையில்லா திண்டாட்டத்தால் கூடுதல் மதிப்புடைய பட்டங்களைப் பெற்றிருந்தாலும், அவை எதுவும் தேவைப்படாத இப்பணிக்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

ஊர்க்காவலர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் எழுத்துத் தேர்வு நடத்தவுள்ளதாக உத்தரகண்ட் துணைநிலை சேவைத் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு குறைந்து வருவது மாநில இளைஞர்களின் பெரும் கவலையாக மாறியுள்ளது. வேலையின்மை விகிதத்தில் உத்தரகாண்ட் தேசிய அளவில் 15வது இடத்தில் உள்ளது.

அண்டை மாநிலமான ஜார்க்கண்ட்டில் வேலையின்மை விகிதம் 1.4%. சத்தீஸ்கரில் 2.7%. இவை உத்தரகண்ட் மாநிலத்துக்கு எதிர்மாறாக உள்ளது. உத்தரகண்டில் வேலையின்மை விகிதம் 4.9% ஆக உள்ளது. இது மாநிலத்தின் வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அவசரத் தேவை இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

இதையும் படிக்க | வனக் காப்பாளா், காவலா் காலியிடங்கள்: உடற்தகுதித் தோ்வு எப்போது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com