/

தில்லியில் பட்டாசுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

தில்லியில் பட்டாசுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
பட்டாசுக்குத் தடை- Center-Center-Bangalore
Updated On :4 நவம்பர் 2024, 12:32 pm

DIN

புது தில்லியில் காற்று மாசுபாடு காரணமாக பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டத் தடை உத்தரவை கடுமையாகப் பின்பற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், நிரந்தரத் தடை விதிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு வெடிக்கும் நிகழ்வுகளை தடுக்க நடவடிக்கை எடுக்காததால், தில்லியில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்திருப்பதையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

தில்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடை, முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது, தீபாவளியன்று, காற்றின் தரம் மிக மோசமான அளவை எட்டியிருப்பதன் மூலம் கண்கூடாகத் தெரிய வந்துள்ளது என்று தில்லி அரசை குற்றம்சாட்டியிருக்கும் உச்ச நீதிமன்றம், தில்லியில் பட்டாசு வெடிக்க பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை செயல்படுத்தியது குறித்து விவரம் கேட்டுள்ளது.

தில்லியில், பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பதை உடனடியாக நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவை உறுதி செய்வது யார் பொறுப்பு? இந்த தடை உத்தரவு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டதா? உடனடியாக இதனை விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

மேலும், தில்லியில், காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வகையில் நிரந்தரமாக பட்டாசுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.